நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அருகே மானாத்தாள், கண்காணிப்பட்டியில் உள்ள வேட்ராய பெருமாள் கோவில் சுவாமி, கோவில் வீட்டிலிருந்து புஷ்ப பல்லக்கில், சோரகை மலையில் உள்ள கோவிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இன்று காலை, 7:00 மணிக்கு, மானாத்தாள் ஏரிக்கரையில் உள்ள சஞ்சீவிராய சுவாமிக்கு அபிேஷகம், பூஜை நடக்கிறது. மதியம், மானாத்தாள் ஏரியில் தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. மாலை, வேண்டுதல் மெரமனை, இரவு, ஏரிக்கரையில் இருந்து புஷ்ப பல்லக்கில், கண்காணிப்பட்டி ஊர் மெரமனை நடக்கிறது.