/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைப்பாதையில் ரப்பர் ரோலர் காஸ் தடுப்பு பணியை பார்வையிட்ட சுற்றுலா அமைச்சர்

ADDED : ஜன 22, 2025 01:18 AM
மலைப்பாதையில் ரப்பர் ரோலர் காஸ் தடுப்பு பணியை பார்வையிட்ட சுற்றுலா அமைச்சர்
ஏற்காடு, :சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சில ஆபத்தான வளைவுகள் உள்ளன. விபத்தின்போது சாலையோர தடுப்பு சுவரை இடித்து, வாகனங்கள் ஆழமான பகுதியில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதை தவிர்க்க, மலைப்பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில், ரப்பர் ரோலர் காஸ் பேரிகார்டு அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. அப்பணியை, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று பார்வையிட்டார். அதன் தரம், செயல்படும் விதங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் அப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். முன்னதாக மலைப்பாதையில் நடந்து வரும் சாலை சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.