/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் ஓடும் கழிவு நீரால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
/
சாலையில் ஓடும் கழிவு நீரால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
சாலையில் ஓடும் கழிவு நீரால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
சாலையில் ஓடும் கழிவு நீரால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
ADDED : டிச 10, 2024 07:37 AM
ஏற்காடு: சாலையில் ஓடும் கழிவு நீரால், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.ஏற்காடுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்-கின்றனர். ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், படகு இல்லம் சென்று படகு சவாரி செய்யாமல் செல்வது கிடையாது. அதன் அருகில் சூழல் சுற்றுலா பூங்காவும் உள்ளது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் படகு இல்ல சாலை பரபரப்பாக காணப்-படும்.
ஜெரினாக்காடு, லாங் கில் பேட்டை, முருகன் நகர், ஏற்காடு டவுன் பகுதிகளில் இருந்து
வெளியேற்றப்படும் கழிவு நீர், படகு இல்ல சாலை ஓரமாக செல்லும் கழிவு நீர் வாய்க்கால் வழியா-கத்தான்
செல்கிறது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுகிறது. சூழல்
சுற்றுலா பூங்கா, படகு இல்ல நுழைவாயில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுற்றுலா பயணிகள் கழிவு நீரை தாண்டி செல்லும் சூழல் உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே,
சம்பந்தப்பட்ட அதிகா-ரிகள் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, சாலையில் ஓடும்
கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

