ADDED : மே 18, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: கோடை விடுமுறையை கொண்டாட, ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதேபோல் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், பயணச்சீட்டு வாங்கி, 2 மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏராளமானோர் குவிந்ததால், படகு இல்ல சாலை, அண்ணா பூங்கா சாலை, லேடீஸ் சீட் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் ஊர்ந்தபடி சென்றனர். போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர்.