/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்திய டிராக்டர் பொக்லைன் பறிமுதல்
/
மண் கடத்திய டிராக்டர் பொக்லைன் பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா கே.என்.புதுார் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், நள்ளிரவில் அதிகளவிலான மண் வெட்டி கடத்தப்படுவதாக, தாசில்தார் அலுவலகத்துக்கு புகார் சென்றது. நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு காடையாம்பட்டி ஆர்.ஐ., கல்வி மற்றும் செம்மாண்டப்பட்ட ஆர்.ஐ.,பாலாஜி ஆகியோர், கே.என்.புதுாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தி வந்த, 2 டிராக்டரை பிடித்து பறிமுதல் செய்தனர். அதிலிருந்த ஓட்டுனர் தப்பிச் சென்றார். ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

