நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன், தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று, தர்ணா போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவி-டுதல்; அரசு பஸ் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்-கூடாது; மின்சார பஸ்களை அரசே இயக்குதல்; காலி பணியிடங்-களை உடனே நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்-தினர். சி.ஐ.டி.யு., போக்குவரத்து மண்டல தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், அரசு விரைவு போக்குவரத்து மாநில துணை பொதுச்செயலர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

