ADDED : ஆக 10, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், மானாவாரி சாகுபடி நிலத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் குறித்த, உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார்.
அதில் மண் பரிசோதனை செய்து, தரமான சான்று பெற்ற விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் மானாவாரி நிலத்தில் நல்ல மகசூல் பெறலாம் என, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி பயிற்சி அளித்தார். பல்துறை அலுவலர்கள், துறை சார்ந்த திட்டங்களை தெரிவித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்செல்வி, சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்றனர்.