/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி
/
சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி
சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி
சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : டிச 20, 2024 01:06 AM
சேலம், டிச. 20-
சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று ஒருநாள் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் இணைந்து, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை, நேற்று சேலம் தனியார் கல்லுாரியில் நடத்தியது. சேலம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் வரவேற்றார். சவுடேஸ்வரி கல்லுாரி தாளாளர் மற்றும் செயலர் குமாரராஜா துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன் சிறப்பாளராக பங்கேற்றார். சமுதாயத்தில் இளைஞர்களின் பொறுப்பு குறித்து, யூத் ரெட் கிராஸ் அலுவலர் கணேசன், ரத்த தானம் செய்வதால் விளையும் நன்மைகள் குறித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் விளக்கினர்.
தொடர்ந்து பேரிடர் மேலாண்மை, முதலுதவி மருத்துவம், போதை தடுப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், 25 கல்லுாரிகளிலிருந்து 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.