/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3ம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்
/
3ம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்
ADDED : அக் 06, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தில், 3ம் நிலை நுாலகர்கள், 6 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மைய நுாலகத்தில் பணியாற்றிய பாலசுப்ரமணியம், குகை முழுநேர கிளை நுாலகத்துக்கும்; கிருஷ்ணன் ஆத்துார் முழுநேர கிளை நுாலகத்துக்கும்; சித்ரலதா செந்தாரப்பட்டி கிளை நுாலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் குகையில் பணியாற்றிய பேபி; ஆத்துாரில் பணியாற்றிய பைங்கிளி, செந்தாரப்பட்டி கிளை நுாலக சுப்ரமணி ஆகியோர், மாவட்ட மைய நுாலகத்துக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.