/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
/
காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
ADDED : மார் 17, 2024 02:33 PM
காங்கேயம்: காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் அருகே, தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்குகிறது. நுாற்றாண்டு பழமையான கட்டடம் என்பதால், கட்டடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது. இதனால் அலுவலகம் வேறிடத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி திருப்பூர் சாலையில், வாய்க்கால் மேடு பஸ் நிறுத்தம் அருகில் ஜேசீஸ் பீடர் ஸகூல் அருகில், தனியார் கட்டடத்துக்கு மாற்றப்படவுள்ளது. நாளை முதல் இந்த இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும். இதற்காக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள், தளவாடங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வேன்களில் நேற்று ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

