/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
/
திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
ADDED : நவ 03, 2024 01:24 AM
திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு
எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
வீரபாண்டி, நவ. 3-
வீரபாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: திருச்சி 1 ரக தக்கைப்பூண்டு குறுவை, சம்பா, தாளடி, நவரை என எல்லா பருவங்களுக்கும் ஏற்றது. விதைத்த, 45 நாட்களுக்கு பின் அதே நிலத்தில் மடக்கி உழ உகந்தது. இவை ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 17.80 டன் பசுந்தாள் விளைச்சலை தரும். உள்ளூர் ரகங்களை விட, 50 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைப்பதோடு பெரிய வேர் முடிச்சுகளை கொண்டது.
இதன்மூலம் பயிர்களின் சீரான வளர்ச்சி, அதிக விதை உற்பத்தி தரவல்லது. குறைவான கார்பன் தழைச்சத்து விகிதம் கொண்டது. அதிக பசுந்தாள் விளைச்சல் தரக்கூடியது. களர், உவர் நிலத்தை சீர் செய்து திருத்தம் செய்ய சிறந்த ரகம். பயிர் சுழற்சிக்கு நன்செய் நிலங்களுக்கு பொருத்தமான மாற்றுப்பயிர். பசுந்தாள் பயிர் செய்ய ஹெக்டேருக்கு, 50 கிலோ, விதை உற்பத்திக்கு ஹெக்டேருக்கு, 20 கிலோ விதைகள் தேவை.
ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை, 3 பாக்கெட் ரைசோபியம் கொண்டு நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். தழைச்சத்து, 25 சதவீதம், மணிச்சத்து, 50 சதவீதம், சாம்பல் சத்து, 25 சதவீதம் என்ற விகித அளவில் உரம் இட வேண்டும். இந்த ரகத்தில் பூச்சி, நோய் தாக்குதல் பாதிப்பு ஏற்படாது.
பசுந்தாள் உரத்துக்கு விதைப்பு செய்த, 45ம் நாளில் மடக்கி உழ வேண்டும். விதை உற்பத்திக்கு விதைத்த, 100வது நாளில் காய்களை அறுவடை செய்து பயன்படுத்தலாம்.