/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈ.வெ.ரா., பெயரை ஒட்டி தி.வி.க., ஆர்ப்பாட்டம்
/
ஈ.வெ.ரா., பெயரை ஒட்டி தி.வி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 08:04 AM
ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதை, 8வது கொண்டை ஊசி வளைவில், நெடுஞ்சாலை துறையினர் எழுதியிருந்த, 'ஈ.வெ.ரா., வளைவு' மீது, 3 நாட்களுக்கு முன், நா.த.க.,வினர், 'தகடூர் அதியமான் வளைவு' என, பிளக்ஸ் ஒட்டினர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறையினர் புகாரில், ஏற்காடு போலீசார், 13 பேர் மீது வழக்குப்பதிந்தனர். நேற்று முன்தினம் இரவு, நெடுஞ்சாலைத்துறையினர், 'தகடூர் அதியமான் வளைவு' என்ற பிளக்ஸை அகற்றிவிட்டு, அதே பெயரை, பெயின்டால்
எழுதினர்.
இதை அறிந்த, தி.வி.க.,வினர், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 8வது கொண்டை ஊசி வளைவில் திரண்டு, 'தகடூர் அதி-யமான் வளைவு' மீது, 'ஈ.வெ.ரா., வளைவு' என பிளக்ஸ் ஒட்டி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

