ADDED : ஜூலை 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சுக்கம்பட்டி மூக்கனுார், காட்டுவளவை சேர்ந்த மணி மனைவி தமிழ்செல்வி, 28. இவர் ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த, 1ல் மயக்கம் வருவதாக இருந்ததால், மாத்திரை போட்டுள்ளார். சற்று நேரத்தில் இருமல் ஏற்பட, அப்போது ரத்தமும் சேர்ந்து வந்தது. தொடர்ந்து தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கினார்.
அவரை உறவினர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.