/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பராமரிப்பற்ற கழிப்பறை; பெண்கள் அவதி
/
பராமரிப்பற்ற கழிப்பறை; பெண்கள் அவதி
ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சி பண்டிதகானுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி பெண்கள் பயன்படுத்த, 20 ஆண்டுக்கு முன், அரசு பள்ளி அருகே கழிப்பறை அமைத்து பயன்பாட்டில் இருந்தது.
சரியாக பராமரிக்காததால் தற்போது பாழடைந்து புல், பூண்டு முளைத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பெண்கள், திறந்தவெளியில் செல்ல வேண்டிய அவல நிலை நேரிடுகிறது. இதனால் கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, பெண்கள் வலியுறுத்தினர்.