/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாஸ்து, முகூர்த்த நாளில் தி.மு.க., அலுவலகம் கட்ட பூஜை
/
வாஸ்து, முகூர்த்த நாளில் தி.மு.க., அலுவலகம் கட்ட பூஜை
வாஸ்து, முகூர்த்த நாளில் தி.மு.க., அலுவலகம் கட்ட பூஜை
வாஸ்து, முகூர்த்த நாளில் தி.மு.க., அலுவலகம் கட்ட பூஜை
ADDED : ஏப் 24, 2025 02:09 AM
ஆத்துார்:வாஸ்து நாள், குரு ஓரை நேரம், முகூர்த்த நாளான நேற்று, ஆத்துாரில், தி.மு.க.,வினர் நகர அலுவலகம், வணிக வளாகம் கட்ட பூமி பூஜை போட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், காமராஜர் சாலையில் உள்ள, ஸ்டேட் வங்கி அருகே, 1970க்கு முன், 2,400 சதுரடி நிலம், தி.மு.க., அலுவலகத்துக்கு வாங்கப்பட்டு, அக்கட்சி தலைமை பெயரில் பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை, தனியார் கடை நடத்த, வாடகைக்கு விடப்பட்டது. அங்கு கட்சி அலுவலகம், வணிக வளாகம் கட்ட, உள்ளூர் தி.மு.க.,வினர் வலியுறுத்தினர்.
புதன்கிழமையான நேற்று, வாஸ்து, முகூர்த்த நாள் என்பதால், தி.மு.க., அலுவலகம், இரு அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்ட பூமி பூஜை விழா நடந்தது. 9:00 முதல், 10:00 மணி வரை, 'குரு ஓரை' என்பதால், 9:15 மணிக்கு, செங்கல், பால மரக்கிளை வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி மஞ்சள், குங்குமம், செங்கல் மீது போட்டு, பூஜை செய்தனர்.
அப்போது, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், ஆத்துார் நகர செயலர் பாலசுப்ரமணியம், ஒன்றிய செயலர் செழியன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, ஆத்துார் நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியினர் வழிபட்டனர். மேலும் கட்சியினரின், 'நிதி' பங்களிப்புடன், வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
பலன் என்ன?
வாஸ்து நாள், குரு ஓரை ஆகியவை, கட்டடம் கட்டுவதற்கு நல்ல அறிகுறிகள். அந்த நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் நல்ல பலனைத்தரும். அதனால் கட்டட பணியை தொடங்கும் முன், வாஸ்து நாள், குரு ஓரையை கவனத்தில் கொள்வது நல்லது என்பதால், தி.மு.க.,வினர், கட்சி அலுவலகம் கட்ட நல்ல நேரம் பார்த்து பணியை தொடங்கியுள்ளதாக, ஜோதிடர்கள் கூறினர்.

