/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பி வழியும் வையணை
/
தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பி வழியும் வையணை
ADDED : அக் 30, 2025 01:53 AM
சேந்தமங்கலம், தொடர் மழை காரணமாக, சேந்தமங்கலம் அருகே உள்ள வையணை நிரம்பி வழிந்தது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. கடந்த வாரம் முழுவதும் தொடர் மழை பெய்ததால், அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கொல்லிமலை, எடப்புலிநாடு பகுதியில் பெரிய ஆறு ஒன்று உள்ளது. அந்த ஆற்றுக்கு வரும் தண்ணீர், அடர்ந்த வனப்பகுதி வழியாக அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பை குளத்திற்கு வருகிறது.
அந்த குளம் நிரம்பி, உபரி நீர் வழியாக சின்னகுளம் வந்து அங்கிருந்து வையணை ஆற்றை அடைகிறது. இதன் காரணமாக, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள காரவள்ளி, நடுக்கோம்பை, வெண்டாங்கி, ராமநாதபுரம் புதுார், காந்திபுரம், துத்திக்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

