/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்வேறு சர்ச்சை: இன்ஸ்பெக்டர் மாற்றம்
/
பல்வேறு சர்ச்சை: இன்ஸ்பெக்டர் மாற்றம்
ADDED : டிச 19, 2024 01:31 AM
ஓமலுார், டிச. 19-
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக ஞானசேகரன் என்பவர், 2023 மே மாதம் பொறுப்பேற்றார். 20 மாதங்
களுக்கு பின், நேற்று முன்தினம், போலீஸ் துறை வடக்கு மண்டலத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது:
கடந்த மே, 2ல், தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பிரச்னையில் கலவரம் ஏற்பட்டு, கடைகள் தீ வைத்து எரிந்த சம்பவம், தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. மாவட்ட எல்லையான தொப்பூர், பொம்மிடி வழியே, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுப்பதில் சுணக்கம், நில வழக்குகளில் அதிக தலையீடு, நகை திருடுபோன வழக்கில் தாமத விசாரணை உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

