ADDED : நவ 29, 2026 01:10 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் நகர வி.சி., சார்பில், அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலர் ரஷ்யா ரவி தலைமை வகித்தார்.அதில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செய்வதை தவிர்த்து, மகளிருக்கான இட ஒதுக்கீடு, 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர். மண்டல செயலர் நாராயணன், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஆத்துார் ஒன்றிய வி.சி., சார்பில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் சங்ககிரியில், சேலம் மாவட்ட செயலர் அருள்
பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மண்டல துணை செயலர் பெருமாவளவன் பேசினார். மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
