/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொம்பாடிப்பட்டி பிரிவு பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்
/
கொம்பாடிப்பட்டி பிரிவு பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்
கொம்பாடிப்பட்டி பிரிவு பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்
கொம்பாடிப்பட்டி பிரிவு பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்
ADDED : பிப் 03, 2025 07:17 AM
வீரபாண்டி: சீரகாபாடி அருகே கொம்பாடிப்பட்டி பிரிவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால், அங்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 18.43 கோடி ரூபாய் மதிப்பில், 30 மீ., அகலம், 400 மீ., நீளத்தில் இரட்டை வழி சுரங்கப்பாலம் கட்டும் பணி, 2023 ஜூனில் தொடங்கியது.
தற்போது சுரங்க வழி மற்றும் பால தடுப்புச்சுவர் என, 90 சதவீத பணி முடிந்த நிலையில், புது பாலத்தின் இரு புறமும் அனைத்து வாகனங்களும் சென்று வர அனுமதிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. 10 நாட்கள் சோதனைக்கு பின் பாலத்தின் இருபுறமும் தெருவிளக்குகள், தகுந்த எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்ட பின், முறையாக பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.