நாளை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலை பட்டமளிப்பு விழா
நாளை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலை பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 06, 2026 01:16 AM
சேலம்: சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்-லுாரி மற்றும் மருத்துவமனையில் உள்ள அன்னபூர்ணா கலைய-ரங்கில், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்க-லையின், 19-வது பட்டமளிப்பு விழா, நாளை மதியம், 2:30 மணிக்கு நடக்க உள்ளது.
பல்கலை நிறுவனர் சண்முகசுந்தரம் ஆசியுடன், வேந்தர் கணேசன் தலைமை ஏற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்-களை வழங்க உள்ளார். அறங்காவலர் அன்னபூரணி, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை தலைவர் சரவணன் பங்கேற்க உள்ளனர்.சதீஷ்குமார், பல்கலை துணைத்தலைவர்கள் சந்திரசேகர், அனு-ராதா, இயக்குனர்கள் காமாட்சி, சுமதி, அருணாதேவி, ராமசாமி, ஜெகநாதன், நிர்வாக இயக்குனர்கள் கோகுல் கிருஷ்ணன்(வளாக வளர்ச்சி), வசுந்தரா, அமிர்தவர்ஷினி, ஆவர்த்தினி முன்னிலை வகிப்பர்.
சென்னை அப்போலோ மருத்துவமனை, இரைப்பை குடலியல் நிபுணரான, பத்மபூஷன் பழனிசாமி தலைமை விருந்தினராக, சிறப்புரை நிகழ்த்த உள்ளார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறு-வன நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சுதிர், ஆண்டறிக்கை வாசிப்பார்.
கோவை கங்கா மருத்துவமனை தலைவர், பேராசிரியர் ராஜசே-கரன், தமிழக அரசின் அயல்நாட்டு தமிழர் நலன் மற்றும் மறு-வாழ்வுத்துறை ஆணையரக உறுப்பினர் கால்டுவெல் வேல்நம்-பிக்கு, கவுரவ முனைவர் விருது வழங்கப்படும். விழா ஏற்பாடு-களை, இணை துணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
