/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பக்த ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணுபதி புண்யகால பூஜை
/
பக்த ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணுபதி புண்யகால பூஜை
ADDED : ஆக 18, 2024 04:14 AM
வீரபாண்டி: சேலம் விஷ்ணுபதி பூஜை கமிட்டி சார்பில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய தமிழ் மாத பிறப்புகளில், பழமையான கோவில்களில் விஷ்ணுபதி புண்யகாலத்தில் சிறப்பு பூஜை நடத்-தப்படும்.
அதன்படி ஆவணி பிறப்பையொட்டி வலசையூர் பள்-ளிப்பட்டி அருகே தைலானுார் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை, கணபதி யாகத்துடன் விஷ்ணுபதி புண்யகால பூஜை தொடங்கியது. தொடர்ந்து மகா சுதர்சன, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, பார்வதி சுயம்வரா உள்பட, 11 வகை யாகங்கள், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டன. மூலவர் ஆஞ்சநேயர், தசாவ-தார பெருமாளுக்கு, யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீரால் அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்-டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்-னதானம் நடந்தது.

