/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?
/
பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?
பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?
பெயின்ட் கடையில் தீ விபத்து குடும்ப பிரச்னை காரணமா?
ADDED : டிச 17, 2024 07:22 AM
ஓமலுார்: குடும்ப தகராறு காரணமாக, பெயின்ட் கடைக்கு தீ வைக்கப்பட்டதா? என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலுார் அருகே, புளியம்பட்டி குடித்தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 36, தரண்யா, 34, தம்பதியர். புளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, தரண்யா பெயரில் உள்ள பெயின்ட் கடையை சதீஷ்குமார் நடத்தி வந்துள்ளார். நேற்று காலை, 9:15 மணிக்கு பூட்டியிருந்த கடையில்
தீப்பற்றி புகை வந்தது. உடனே வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர்.இது குறித்து ஓமலுார் போலீசார் கூறியதாவது: தரண்யாசதீஷ்குமார் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், இரு மாதங்களாக
இருவரும் தனித்தனியாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், தரண்யா வீட்டுக்கு சென்று அவரை வீட்டுக்கு அனுப்பி
வைக்குமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு சதீஷ்குமார், தனது மாமனார் வீட்டு பின்புறம் மாடியில் ஏறி,
பெயின்ட் கடைக்கு சென்று விட்டு வெளியே வந்ததை தரண்யா பெற்றோர் பார்த்ததாக புகார் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில்
கடையில் தீப்புகை வெளியேறியுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து
விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.

