/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர், உர மேலாண் வழிமுறை: விவசாயிகளுக்கு அறிவுரை
/
நீர், உர மேலாண் வழிமுறை: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : நவ 30, 2024 02:43 AM
வீரபாண்டி: அங்கக வேளாண்மையில் நீர், உரங்களை பயன்படுத்தும் வழி-முறை குறித்து, வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:
பயிர் சாகுபடியில் செறிவூட்டப்பட்ட தொழு உரம், அடி உரமாக போடுவது நல்ல பலன் கொடுக்கும். தொழு உரத்தில், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 10 கிலோ, 'ராக் பாஸ்பேட்' ஆகியவற்றை சம அளவில் கலந்து, செறி-வூட்டம் செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு, 750 கிலோ அளவில், அடி உரமாக இட வேண்டும்.
அதேபோல் நடவு செய்த, 25 நாள் மற்றும் 45 நாள் இடைவெ-ளியில், ஹெக்டேருக்கு, 1 டன் மண்புழு உரம் துாவ வேண்டும். துார் பிடிக்கும் பருவம் மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் நீரில், 30 மி.லி., பஞ்சகவ்யா கரைசலை கலந்து, இலை வழி தெளிப்பானாக தெளிக்க வேண்டும். நீர் மேலாண்மையை பொறுத்தவரை, நடவுக்கு முன், 10 நாட்கள், மண் நனையும் அளவு, நீர் பாய்ச்ச வேண்டும். செடி வளர்ந்து பூங்கொத்து உரு-வாகும் வரை, மண்ணில் விரிசல் ஏற்பட்டால், 2.5 செ.மீ., ஆழத்-துக்கு நீர் பாசனம் செய்ய வேண்டும். பின் கட்டிய நீர் மண்ணில் இறங்கி மறைந்த பின், 5 செ.மீ., ஆழம் வரை நீர் பாசனத்தை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்-பெறலாம்.