/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பண்ணப்பட்டி குட்டை கரை விரிசல் உடைப்பு அபாயத்தால் நீர் வரத்து நிறுத்தம்
/
பண்ணப்பட்டி குட்டை கரை விரிசல் உடைப்பு அபாயத்தால் நீர் வரத்து நிறுத்தம்
பண்ணப்பட்டி குட்டை கரை விரிசல் உடைப்பு அபாயத்தால் நீர் வரத்து நிறுத்தம்
பண்ணப்பட்டி குட்டை கரை விரிசல் உடைப்பு அபாயத்தால் நீர் வரத்து நிறுத்தம்
ADDED : அக் 12, 2024 01:17 AM
பண்ணப்பட்டி குட்டை கரை விரிசல்
உடைப்பு அபாயத்தால் நீர் வரத்து நிறுத்தம்
ஓமலுார், அக். 12-
பண்ணப்பட்டி குட்டையில், புதிதாக அமைக்கப்பட்ட கரையில் விரிசல் ஏற்பட்டு, ஒரு அடி பூமிக்குள் சென்றதால், தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் பண்ணப்பட்டி குட்டை உள்ளது. 48 ஏக்கரில் அமைந்துள்ள குட்டை சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பண்ணப்பட்டி பிரிவு சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. அப்போது பூசாரிப்பட்டியிலிருந்து, பண்ணப்பட்டிக்கு செல்லும் சர்வீஸ் சாலைக்கு குறைவான இடம் இருந்ததால், பண்ணப்பட்டி குட்டை கரை அருகே நிலம் எடுக்கப்பட்டது. அதற்காக, 400 மீட்டர் குட்டை கரையை உள்ளடக்கி அமைக்கப்பட்டது. இப்பணியை பாலம் கட்டும் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களாக, ஏற்காடு மலையில் பெய்த பலத்த மழை காரணமாக, கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோட்டை குள்ளமுடையான் ஏரி நிரம்பி அதன் தண்ணீர் பண்ணப்பட்டி குட்டைக்கு நேற்று காலை முதல் வருகிறது. குட்டையில், 75 சதவீதம் தண்ணீர் வந்த நிலையில், புதிதாக உள்ளடக்கி அமைக்கப்பட்ட கரையின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, ஒரு அடி உயரம் குறைந்து பூமிக்குள் சென்றுள்ளது.
தண்ணீர் நிரம்பினால் கரையில் உடைப்பு ஏற்பட்டு விடும் என்பதால், பஞ்., அதிகாரிகள், நீர்வள பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, குட்டைக்கு வரும் தண்ணீரை தடுத்து, சந்தைப்பேட்டை ஏரிக்கும், வடமனேரிக்கு செல்லும் வகையில் திசை திருப்பி விட்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட குட்டை கரையை பலப்படுத்திய பின், தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

