/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர், நில, காற்று பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
நீர், நில, காற்று பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 01, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி நாட்டாமங்கலத்தில் நீர், நிலம், காற்று பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நேற்று நடந்தது. தி.மு.க.,வின் கொளத்துார் ஒன்றிய செயலர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
அதில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, 85 வீடுகளுக்கு மறுசுழற்சி செய்யக்கூடிய தலா ஒரு குப்பை தொட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி குழுவினர், காவிரி கரையோரம் கொட்டப்பட்டிருந்த, 50 கிலோ குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவை அகற்றினர். நவப்பட்டி ஊராட்சி செயலர் கணேசன் உள்ளிட்ட பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.