/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு
/
18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு
ADDED : டிச 08, 2025 04:44 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த நவ., 11ல், நீர்மட்டம், 112.11 அடியாக இருந்தது. வினாடிக்கு, 6,026 கனஅடி நீர் வந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
பின் டெல்டாவில் மழை தீவிரம் அடைய, பாசன நீர்தேவை குறைந்தது. இதனால் அணை நீர் திறப்பு கடந்த மாதம், 17 காலை, 8:00 மணிக்கு, 6,000 கனஅடியாகவும், 9:00 மணிக்கு, 3,000 கனஅடி; 18 காலை, 8:00 மணிக்கு, 2,000 கனஅடி, 10:00 மணிக்கு, 1,000 கனஅடி என, படிப்படியாக குறைக்கப்பட்டது.தொடர்ந்து, 18 நாட்கள் வினாடிக்கு, 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 400 கனஅடி என, 1,400 கனஅடி நீர் வெளியேற்றி வந்த நிலையில், மழை தீவிரம் குறைந்து பாசன தேவை அதிகரித்-தது. இதனால் நேற்று மதியம், 12:00 மணிக்கு, மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 3,000 கனஅடியாக மீண்டும் அதிகரிக்கப்-பட்டது. கால்வாயில், 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 116.15 அடி, நீர்இருப்பு, 87.46 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 3,937 கனஅடி நீர் வந்தது.

