/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அணையில் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட தண்ணீர்
/
அணையில் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட தண்ணீர்
ADDED : டிச 03, 2024 07:30 AM
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், ஆனைமடுவு அணை உள்ளது. பெஞ்சல்
புயலால் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, 65.94 அடி உயரத்தை எட்டி அணை
நிரம்பியது. அப்-போது நீர்வரத்து, 1,588 கன அடியாக இருந்தது. இந்த நீர் அப்ப-டியே, 3
மதகுகள் வழியே, முன்னறிவிப்பின்றி வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கால், வசிஷ்ட நதி கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்-தனர். மான், ஆடு, மாடு
உள்ளிட்ட விலங்குகள் அடித்துச்சென்ற-தாக, மக்கள் தெரிவித்தனர். மாலையில், 1,800
கன அடியாக நீர் திறப்பு அதிகரித்தது. இதுகுறித்து நீர்வளத்துறை உதவி
பொறி-யாளர் கோகுல்ராஜிடம் கேட்டபோது, ''அணைக்கு நீர்வரத்து அதி-கமானதால்
மக்களுக்கு முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது. 1993 முதல் பயன்பாட்டில் உள்ள
அணையில், 2005ல், முதன்முதலில், 3 மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது இரண்டாம் முறை, 3 மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது,''
என்றார்.ஆனைமடுவு அணை நிரம்பியதால், சேலம் கலெக்டர் பிருந்தா-தேவி ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: அணை உபரிநீர் வெளியேற்றப்ப-டுவதால்
பேளூர், ஏத்தாப்பூர், பெத்த நாயக்கன்பாளையம், ஆத்துார், தலைவாசல் உள்ளிட்ட
வசிஷ்ட நதி கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க
அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பருவ மழை குறித்த
தக-வல்களை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்-பாட்டு அறைக்கு,
1077 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம். தவிர, 0427 - -2452202, -2450498, 2417341
என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.