ADDED : நவ 04, 2026 06:29 AM

மேட்டூர்:மேட்டூர்
அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. 152 சதுர கி.மீ., நீர்பரப்பு
பகுதியை கொண்டது. கடந்த, 6 மாதங்களாக அணை நீர்மட்டம் குறைவாக
இருப்பதால், 90 சதுர கி.மீ.,க்கு மேல் நீர்பரப்பு பகுதி வறண்டு
காணப்படுகிறது.
அந்த நிலங்களை விவசாயிகள் உழுது பயிர் சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர். அப்பகுதிகளில் நேற்று, நீர்வளத்துறை மேட்டூர் அணை பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில்
சந்திரிகாபுரம், தின்னப்பட்டி, பண்ணவாடி, சேத்துக்குழி,
காவேரிபுரம், மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சிலர்,
சட்ட
விரோதமாக சோலார் பேனல் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும்
மின்சாரத்தால், மோட்டாரை இயக்கி அணையில் தண்ணீர் திருடி,
பாசனத்துக்கு பயன்படுத்துவது தெரிந்தது.
இதுகுறித்து
பொறியாளர்கள் கூறுகையில், 'சோலார் பேனல்கள் சட்டவிரோதமாக
பொருத்தியவர் விபரங்களை சேகரித்து, வருவாய்த்துறைக்கு அனுப்பி
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
