/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் கட்
/
மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் கட்
மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் கட்
மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் கட்
ADDED : ஜூலை 22, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி, செவ்வாய்பேட்டை பகுதிகளில், இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது.
சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், திருமணிமுத்தாறு பாலம் அருகில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனால், செவ்வாய்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில், இன்றும் நாளையும், இரு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.