/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : மே 15, 2025 01:28 AM
ஆத்துார், ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நாளை தீ மிதி விழா, நாளை மறுநாள் தேர் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று காலை, 9:30 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ஜூன மகாராஜாவுக்கு திருமணம் நடந்தது. தங்க கவசத்துடன் மணக்கோலத்தில் காட்சியளித்த அம்மனுக்கு, பக்தர்கள் பலர், தங்க தாலிகளை வழங்கினர்.
மேலும் அம்மன்,
அர்ஜூனனுக்கு, 100 முதல், 1,000 ரூபாய்க்கு மேல் பக்தர்கள், 'மொய்' எழுதினர். அப்போது மூலவர் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியே திரவுபதி அம்மன், அர்ஜூனனை, ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழு தலைவர் ஸ்ரீராம், அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்ளிட்டோரும் வழிபட்டனர்.