sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

களைகட்டும் தீபாவளி விற்பனை: சாதாரண உடையில் 100 போலீசார் 'ரோந்து'

/

களைகட்டும் தீபாவளி விற்பனை: சாதாரண உடையில் 100 போலீசார் 'ரோந்து'

களைகட்டும் தீபாவளி விற்பனை: சாதாரண உடையில் 100 போலீசார் 'ரோந்து'

களைகட்டும் தீபாவளி விற்பனை: சாதாரண உடையில் 100 போலீசார் 'ரோந்து'


ADDED : அக் 28, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஜவுளி, பட்டாசு, இனிப்பு, கடைகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

குறிப்பாக பண்டிகைக்கு முந்-தைய வார விடுமுறை நாளான நேற்று, புத்தாடை வாங்க ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சேலம் கடை வீதி, முதல் அக்ரஹாரம், தேர்வீதி, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், 4, 5 ரோடுகள் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதனால் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், மாந-கர போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்-களில் வாகனங்கள் மூலம் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, 'டிவி' மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படு-கிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட, 10 இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண உடையில், 100 போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில், 500 போலீசார், ஊர்காவல் படையினர், 150 பேர் பாது-காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us