/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில அளவில் முதலிடம் சேலம் வீரர்களுக்கு வரவேற்பு
/
மாநில அளவில் முதலிடம் சேலம் வீரர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 17, 2025 02:21 AM
சேலம், கிரிக்கெட் போட்டி யில், மாநில அளவில் முதலிடம் பிடித்த சேலம் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவிலான, 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில், காஞ்சிபுரம் அணியும், சேலம் அணியும் மோதின. இதில், சேலம் அணி வெற்றி பெற்று முதல் முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்கள், நேற்று சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் வந்தனர். அவர்களை, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் பாபுகுமார், இணை செயலாளர் ராஜூ, துணைத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வீரர்களின் பெற்றோர், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து, சேலம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சேலம் அணி 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை. அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது சாபிர், பேட்ஸ்மேன் ஹர்பீஸ், ஆல் ரவுண்டர் ஆத்ரேயன், பவுலர் மகாவீர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டது வெற்றிக்கு முக்கிய காரணம்,' என்றனர்.