ADDED : பிப் 16, 2025 02:51 AM
சேலம்: தெலுங்கானா மாநிலம் ைஹதராபாத்தில், அகில பாரத கோ சேவா அமைப்பு நிறுவனர் பாலகிருஷ்ணா குருசாமி, நாட்டு மாடு-களை பாதுகாக்க, பசுமாடு மெகா பாதயாத்திரையை, 2024 செப்., 27ல், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஆதிசங்கராச்சாரியார் கோவிலில் தொடங்கினார். பல்வேறு மாநிலங்களை கடந்து வந்த யாத்திரை, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தது.
அம்மாபேட்டை நாமமலை அடிவாரத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில், அதன் நிர்வாகி யதானந்த சரஸ்வதி சுவாமிகள் தலை-மையில், யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை, பாதயாத்திரை குழுவினருக்கும், பசு மாட்டுக்கும் சிறப்பு ேஹாம பூஜை செய்து வழிபாடு நடந்தது. பின் கேரளா நோக்கி புறப்பட்டது. இந்த யாத்திரை, 180 நாட்கள், 4,900 கி.மீ., கடந்து நிறைவாக மார்ச், 27ல் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளதாக, யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.

