/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'திறமையை வளர்த்துக்கொள்ளும்போதுவேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும்'
/
'திறமையை வளர்த்துக்கொள்ளும்போதுவேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும்'
'திறமையை வளர்த்துக்கொள்ளும்போதுவேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும்'
'திறமையை வளர்த்துக்கொள்ளும்போதுவேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும்'
ADDED : ஜன 05, 2025 01:18 AM
சேலம்,சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 'வாழ்க்கை வழிகாட்டி' நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: விடுதி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தினமும் இரு தமிழ், ஒரு ஆங்கில நாளிதழ்கள் வழங்கப் படுகின்றன.
அரசு மருத்துவரால் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. தவிர கேரம், செஸ், கைப்பந்து, கிரிக்கெட், கபடி, நீளம் தாண்டுதல், ஓட்டம், மாவட்ட அளவில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. நவீன காலத்துக்கேற்ப திறமைகளை மாணவ, மாணவியர் வளர்த்துக்கொள்ளும்போது, வேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முதல்கட்டமாக, சேலம், மேட்டூர், போடிநாயக்கன்பட்டி, நங்கவள்ளி பகுதி கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில் அரசன், மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.