ADDED : ஏப் 17, 2025 01:22 AM
சேலம்:சேலம், அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம், 33. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஜிதா, 24. இவர், கடந்த, 14ல் கோவிலுக்கு செல்வதாக புறப்பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கவுதம் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழக அரசு சார்பில் வரும் ஆக., 15 சுதந்திர தின விழாவில், சமுதாய வளர்ச்சியில் சிறந்த சேவைபுரிந்தவர்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது, ஒரு லட்சம் ரூபாயுடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு, 15 முதல், 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான, www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கு தேர்வு பெற குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். அதற்கான சான்று, சமுதாய நலனுக்கு செய்த சேவைகள் என்ன என்பதையும், அதுகுறித்த சான்றுகளையும் பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லுாரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் மே, 3 மாலை, 4:00 மணிக்குள்
விண்ணப்பிக்கலாம்.