/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலத்தரகு தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
/
நிலத்தரகு தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
ADDED : டிச 16, 2024 03:31 AM
சேலம்: சேலத்தில், தமிழக நில தரகர்கள் நலசங்கத்தின் மாநகர் கிழக்கு செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் அண்ணாதுரை பேசியதாவது:தமிழகத்தில் நிலத்தரகு தொழிலில் நேரடியாக, 5 லட்சம் பேர், மறைமுகமாக, 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால், அரசிடம் பெற வேண்டிய சலுகைகளை பெற முடியவில்லை. நிலத்தரகு தொழிலை அங்கீகரித்து, தொழில் பாதுகாப்பு வேண்டி, பல ஆண்டாக அரசிடம் மனு கொடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை. ஆண்-டுக்கு, 40,000 கோடி ரூபாய் வரை, அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுப்பது பத்திர பதிவுத்துறை. அதற்கு அடித்தளமாக இருப்ப-வர்கள் நிலத்தரகு தொழிலாளர்கள் என்பதை இந்த அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள் வரதராஜன், சக்தி சரவணன், மோகன், சரணவன், மனோகரன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.