ADDED : செப் 19, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு இரு நுழைவாயில் உள்ளன. அதிகாரிகள் வரும் வாகனங்கள் ஒரு புறம் நுழைந்து மற்றொரு வழியே வெளியே செல்வது எளிதாக இருக்கும். ஆனால் ஒன்றிய அலுவலகத்தில் ஒருபுற கதவு சேதமாகி பூட்டப்பட்டுள்ளது.
இதனால் அலுவலகம் வரும் மக்கள், அரசு அதிகாரிள் வாகனம் எளிதாக வெளியேற வழியில்லை. அரசு அலுவலக கதவை கூட முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

