/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பெண் கவுன்சிலர், கணவருடன் போராட்டம்
/
டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பெண் கவுன்சிலர், கணவருடன் போராட்டம்
டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பெண் கவுன்சிலர், கணவருடன் போராட்டம்
டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பெண் கவுன்சிலர், கணவருடன் போராட்டம்
ADDED : ஜூன் 03, 2025 01:18 AM
மேட்டூர், மேட்டூர் தாலுகா, வீரக்கல்புதுார் தேர்வுநிலை டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. இதில், 12வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் லதா, 40. இவரது கணவர் பிரபு, 48. இவர் ஏற்கனவே டவுன் பஞ்.,ல் மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளார். வீரக்கல்புதுார் டவுன் பஞ்.,ல், சொத்துவரி, குடிநீர் வரி வசூலிக்க தாமதம் செய்கின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கவும் தாமதம் ஏற்படுகிறது. அதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாலை, 6:30 மணிக்கு கவுன்சிலர் லதா, அவரது கணவர் முன்னாள் கவுன்சிலர் பிரபு இருவரும் பாய், தலையணையுடன் டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பிரபு கூறுகையில், ''டவுன்பஞ்., நிர்வாகத்தின் அவலநிலை குறித்து, செயல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் பாதிக்கின்றனர். டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இரவு முழுவதும் எங்கள் போராட்டம் நீடிக்கும்.'' என்றார்.
டவுன் பஞ்., அலுவலர்கள் கூறுகையில், 'முன்னாள் கவுன்சிலர் பிரபு, வார்டில் ஒருவருக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தார். அதனை வழங்க தாமதமானதால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.' என்றனர்.
நேற்று இரவு, 9:30 மணிக்கு மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உத்தரவுபடி, துணை தாசில்தார் கார்த்திக், ஆர்.ஐ., வெற்றிவேல், டவுன் பஞ்., தலைவர் தெய்வானை மற்றும் வருவாய் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட லதா, அவரது கணவர் பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், டவுன்பஞ்.,ல் அலுவலர்கள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வருவாய்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக கூறினர். அதனை ஏற்று கவுன்சிலர் லதா, கணவர் பிரபு ஆகியோர் 3:00 மணி நேரத்துக்கு மேல் நடத்திய போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.