நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: திருப்பூர், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த, ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி, 38. சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் காருக்கு செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜேஸ்வரி சம்பவ இடத்தில் பலியானார். சங்ககிரி போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.