/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெண்கள் பால்குட ஊர்வலம்
/
ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 29, 2025 01:10 AM
இடைப்பாடி, இடைப்பாடி கவுண்டம்பட்டியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மகாமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இடைப்பாடி கவுண்டம்பட்டியில், பருவதராஜகுல சமுதாயத்திற்கு சொந்தமான, மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று நடந்த ஆடிப்பூர நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் கவுண்டம்பட்டி செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, பால் குடங்களை சுமந்தபடி, தோப்பூர் வழியாக ஊர்வலமாக வந்து மகாமாரியம்மன் கோவிலை அடைந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகாமாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஊர்தலைவர் சண்முகம், ஊர் முக்கியதஸ்கர்கள் மணி, ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.