/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரிந்த மனைவி மகனையும் பார்க்க தடை 'டவரில்' ஏறி காரியம் சாதித்த தொழிலாளி

ADDED : ஜன 13, 2025 03:37 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, தளவாய்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி சின்னண்ணன், 41; இவரது மனைவி மாதேஸ்வரி, 38; தம்பதிக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். குடும்ப பிரச்னையால் மாதேஸ்வரி கணவனை பிரிந்து, சில மாதங்களாக தாயுடன் வசிக்கிறார். மகனை பார்க்க சின்னண்ணன் அவ்வப்போது சென்ற நிலையில், பார்க்க வரவேண்டாம் என்று மாதேஸ்வரி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னண்ணன், தீவட்டிப்பட்டி சமத்து-வபுரம் எதிரே, பயன்பாடற்ற நிலையில் உள்ள, 240 அடி உயர மொபைல்போன் கோபுரத்தில் நேற்று மதியம் ஏறினார். 'மனை-விக்கு தான் கட்டிய தாலியை வாங்கி தர வேண்டும். அப்போது தான் இறங்குவேன்' என கூறினார். தீவட்டிப்பட்டி போலீசார், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாத நிலையில், மாதேஸ்வரியை வரவழைத்து பேச வைத்தனர். இதில் அவர் சமாதானமாகவே, 3 மணி நேரத்துக்கு பின், தீயணைப்பு வீரர்கள் டவரில் இருந்து பத்திரமாக இறக்-கினர். உரிய அறிவுரை கூறி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.