ADDED : நவ 14, 2026 04:14 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசை சேர்ந்தவர் முருகன், 55. கூலித்தொழிலாளியான இவர், ஆந்திராவில் தங்கி வேலை செய்தார். தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தார்.
தொடர்ந்து பொன்னாரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற முருகன், கடந்த, 9ல், களைக்கொல்லி மருந்து குடித்தார். உறவினர் குடும்பத்தினர், அவரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். முருகனின் மகன் வெற்றிச்செல்வன் புகார்படி, வாழப்பாடி போலீசார், முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். தொழிலாளி
இடைப்பாடி, மசியன் தெரு காட்டூரை சேர்ந்தவர் மேகநாதன், 30. சித்துாரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 29. இருவரும் இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தற்போது மேகநாதன், மரம் அறுக்கும் கூலி வேலை செய்தார். புவனேஸ்வரி, சித்துாரில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிகிறார்.
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் புவனேஸ்வரி, கணவருடன், ஓராண்டுக்கு முன், அவரது தாய் வீடு அருகே குடி வந்தார். அப்போதும் பிரச்னை தொடர்ந்தது.
இதனால் கடந்த ஒரு மாதமாக மேகநாதன், அவரது வீட்டில் வசித்தார். கடந்த, 10ல் மனைவியுடன் சமாதானமாகி, சித்துார் வீட்டுக்கு வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
