/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., கொடிகளை கழற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
/
தி.மு.க., கொடிகளை கழற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தி.மு.க., கொடிகளை கழற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தி.மு.க., கொடிகளை கழற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ADDED : நவ 04, 2025 02:13 AM
அதியமான்கோட்டை, அதியமான்கோட்டை அருகே, தமிழக முதல்வர் வருகைக்காக, தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த, தி.மு.க., கொடிகளை கழற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள பொன்னநகரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா, 49. இவர், நேற்று தமிழக முதல்வர் தர்மபுரிக்கு வருவதையொட்டி, பெங்களூரு- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,  தி.மு.க., கொடிகளை சாலையின் நடுவே,  இரும்பு கம்பிகளில் கட்டும் வேலைக்கு வந்திருந்தார். நேற்று மாலை, 3:30 மணிக்கு தடங்கம் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு செல்லும் நுழைவாயில் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில், கட்டப்பட்டிருந்த தி.மு.க., கொடிகள் மற்றும் இரும்பு கம்பிகளை கழற்றி எடுக்கும் வேலையில் ஜீவா ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையில் மேலே சென்ற மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசிய நிலையில், ஜீவாவை மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார்.
உடனடியாக, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

