ADDED : அக் 01, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் இளையராமன், 47. இவர், நேற்று பேளூர் அருகே பெருமாபாளையம் பகுதியில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு, கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு, வேலை செய்து கொண்டி-ருந்தபோது, நேற்று மதியம், 12:00 மணிக்கு மின்சாரம் தாக்கி சம்-பவ இடத்திலேயே இறந்தார். வாழப்பாடி போலீசார், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'இளையராமன், விவசாய நிலத்தில் குழி தோண்டி கொண்டிருந்தபோது, நிலத்-திற்கு அடியில் மின் கேபிள் இருந்துள்ளது. அது தெரியாமல் இளையராஜா கடப்பாறையால் கேபிள் மீது குத்தியுள்ளார். அப்-போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது,'. என்றனர்.

