கூட்டுறவு சங்கங்களை மூடி விட்டு போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள்
கூட்டுறவு சங்கங்களை மூடி விட்டு போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள்
ADDED : ஜூலை 21, 2026 06:01 AM

ஆத்துார்; கூட்டுறவு சங்கங்களை மூடி விட்டு, சேலத்தில் நடந்த போராட்டத்தில் பணியாளர்கள் பங்கேற்-றனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி, ஆத்துார் பகுதிகளில் உள்ள, 43 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகங்களை மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால், கூட்டுறவு சங்க அலுவலகம் வந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதுகுறித்து, கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூறியதாவது:
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்; ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும்; தாயுமானவர் திட்-டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து, விற்பனையாளர் மீது அதிகார திணிப்பை மேற்கொள்ள வேண்டாம்; கணினி பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்களை நிரந்த-ரப்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் வழங்-கப்படும் பணிகளை ரத்து செய்ய வேண்டும் உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்-டத்தில், 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால், ஆத்துார் பகு-தியில் உள்ள, 43 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்பட மாவட்டம் முழுவதும், 273 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூடப்-பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
