/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக இசை தின கொண்டாட்டம்
/
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக இசை தின கொண்டாட்டம்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக இசை தின கொண்டாட்டம்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உலக இசை தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 02:33 AM
சேலம்: உலக இசை தினமானது, ஆண்டுதோறும் இசையின் உணர்வை போற்றும் வகையிலும், இளம் தலைமுறை இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின், நுண்கலை அமைப்பானது பல்கலையின் வேந்தர் டாக்டர். கணேசன் வழிகாட்டுதல்படி, மாணவர்களின் இசை திறனை ஊக்குவித்து வெளிக்கொணரும் நோக்கில், இந்த தினத்தை கல்லுாரி வளாகத்தில் கொண்டாடியது.
நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர்.செந்தில்குமார் முன்னிலை வகித்து, இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக துறையை சேர்ந்த மாணவர்கள், பல்வேறு இசை கருவிகளை வாசித்து தங்களின் திறனை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கான இசை சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் முடிவில் பரிசு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, துறையின் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி மற்றும் ஆண்டனிரூபன், திவ்யா, ராஜஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.