ADDED : டிச 08, 2024 01:27 AM
வீரபாண்டி, டிச. 8-
வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை சார்பில், அரியாம்பாளையத்தில் உலக மண் வள தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து பேசியதாவது:
மண்ணின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளில் விகிதத்துக்கு ஏற்ப உரம் மற்றும் ரசாயன பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடாமல் நல்ல தரமான நிலத்தை தயார் செய்ய மண் பரிசோதனை செய்து
மண் வள அட்டை பெறுவது அவசியம்.
இதை அனைத்து விவசாயி களுக்கும் கொண்டு சேர்க்கும்
விதமாக, உலக மண்வள நாள் கொண்டாடப்படுகிறது. மண் வளத்தை பாதுகாக்க மண்புழு, தொழு, பசுந்தாள் உள்ளிட்ட மட்கும் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 20 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மண் மாதிரி எவ்வாறு எடுப்பது என செயல்முறை விளக்கம் அளித்தார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் தேசிங்குராஜா, பழச்செடிகள் தொகுப்பு பெறும் வழிமுறைகள், நுண்ணீர் பாசன திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன்
உள்ளிட்டோர் செய்திருந்தனர்.