/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலயத்துக்கு யாகசாலை பணி
/
கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலயத்துக்கு யாகசாலை பணி
கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலயத்துக்கு யாகசாலை பணி
கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலயத்துக்கு யாகசாலை பணி
ADDED : ஜன 21, 2024 12:11 PM
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் வரும், 24ல் பாலாலய பிரதிஷ்டை நடக்க உள்ளது. இதற்கு யாகசாலை அமைக்கும் பணி, சுவாமியை வைப்பதற்கான அறை கட்டப்பட்டு வருகிறது. நாளை காலை ஆச்சார்ய அழைப்புடன் தொடங்கி பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, மகாசாந்தி ஹோமம், பூர்ணாஹூதி சாற்று முறை உள்ளிட்டவை நடக்க
உள்ளது. மாலையில் அங்குரார்பணம், நித்ய ஹோமம் உள்ளிட்டவை நடக்கும்.
தொடர்ந்து, 23 காலையில் பல்வேறு வகை ஹோமம், பாலாலய பிம்ப வாஸ்து, மாலையில் மகா சாந்தி விசேஷ திருமஞ்சனம், சதுர்வேத பாராயணம், மூல மந்திர ஹோமங்கள் நடக்கும். 24 காலை ஹோமங்கள், வேத, இதிகாச, புராண, பிரபந்த சாற்று முறை நடக்க உள்ளது.
தொடர்ந்து அன்று காலை, 10:00 முதல், 11:00 மணிக்குள் பாலாலய பிரதிஷ்டை, 11:15 மணிக்கு பிரதம விஸ்வரூப தரிசனம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

