ADDED : ஆக 03, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது.
சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், 3,348 மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆத்துார், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 15,169 முதல், 18,012 ரூபாய்; உருண்டை ரகம், 13,859 முதல், 15,899 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 14,069 முதல், 18,889 ரூபாய் வரை விலைபோனது. 3,348 மூட்டைகள் மூலம், 2.96 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட இந்த வாரம், 634 மூட்டைகள் அதிகம் கொண்டுவரப்பட்டன.