/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிவன் சம்பா நெல் ரகம் மானியத்தில் பெறலாம்
/
சிவன் சம்பா நெல் ரகம் மானியத்தில் பெறலாம்
ADDED : ஆக 08, 2025 01:48 AM
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார விவசாயிகள், மானிய விலையில் சிவன் சம்பா பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் ரகம் வினியோகிக்கப்பட உள்ளது. ஏக்கருக்கு, 1,200-, 1,500 கிலோ மகசூல் தரக்கூடியது. அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த, விதை உற்பத்தி ஊக்கத்தொகையாக, கிலோவுக்கு, 15 ரூபாய், வினியோகத்துக்கு, 50 சதவீத மானிய விலையில், ஒரு கிலோவுக்கு, 35 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். முன்பதிவுக்கு, 99524 17105 என்ற எண்ணில் அழைக்கலாம்.